சைதன்ய சொரூபமாக இன்றும் சிவ வாக்கிய சித்தர் இங்கு வாழ்ந்து வருவதாகவும், உட்பிரகாரத்தில் குகையில் சிவவாக்கியர் அமர்ந்த நிலையில், வள்ளியோடு சுப்ரமணியர் அருளும் காட்சி உள்ளது. அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோயில் சென்று சூரியனை வழிபடுவதால் சிறப்பும் இங்கு கிடைக்கும். &rdquoதிருப்பூர் மாவட்டத்தில் காங்கயம் வட்டத்தில் திருப்பூர் சாலையில் காங்கயத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் சிவன்மலை உள்ளது. காங்கய நாட்டுக்கு பொதுமலையாக உள்ளது. காங்கய நாட்டுப் பதினான்கு ஊர்ப்பொது மக்களும் வழிபட்டதாகவும் திருப்பணிகள் செய்ததாகவும் குடமுழுக்கு விழா நடத்தியதாகவும் இலக்கியங்களும் தனிப்பாடல்களும் வரலாற்று ஆவணங்களும் கூறுகிறது.&rdquo கொங்கு நாட்டுக் குன்றுதோறாடல் தலங்களில் சிறந்தது சிவன்மலை சமயப் பெருமையும், இலக்கியச் சிறப்பும், புராணப் புகழும் உடையது...